Home இலங்கைவெளிநாட்டுப் பிரஜைகளுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட மாட்டாது:-

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட மாட்டாது:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாது எனவும், சிறுநீரகத்திற்காக பணம் அறவீடு செய்யக் கூடாது எனவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இந்திய சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சர்ச்சையில் இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மனித உறுப்பு வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை கிரமமான முறையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More