167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கண்டியில் இடம்பெற்ற இன முரண்பாடுகள் குறித்து விசாரணை நடாத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நிறுவப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு நீண்ட கால அடிப்படையிலான தீர்வுத் திட்டமொன்றை எட்ட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு வார காலமாக நீடித்து வந்த பதற்ற நிலை தணிந்துள்ளதாகவும் நாடு வழமைக்கு திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கலகம் தொடர்பில் விரிவாக விசாரணை நடாத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Spread the love