எந்தவொரு சூழ்நிலையிலும் ஆடுவதற்கு தினேஸ் கார்த்திக் தயாராக உள்ளார் என இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்று முடிந்த சுதந்திரக் கிண்ண இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் இந்தியா சம்பியன் பட்டம் வென்றதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான நிலைமைகளிலும் தினேஸ் கார்த்திக் ஆடுவதற்கு தயார் நிலையில் இருப்பார் என புகழாரம் சூட்டியுள்ள அவர் துடுப்பாட்ட வரிசையில் முன்னால் சென்று ஆடுவதற்கு கார்த்திக் மெய்யாகவே விரும்பிய போதிலும் அணியின் நலனைக் கருத்திற்கொண்டு, அவரை இறுதி ஒவர்களில் துடுப்பெடுத்தாட தக்க வைத்துக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார். தினேஸ் கார்த்திக் அற்புதமான திறமைகளை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார் என ரோஹித் சர்மா
குறிப்பிட்டுள்ளார்.