தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பானுப்பிரியா, நடிகையர் திலகம் படத்துக்காக கீர்த்தி சுரேசுக்கு குரல் கொடுக்கவுள்ளார் . ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்த பானுப்பிரியா திருமணத்துக்கு பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அவர் தமிழில் கடைசியாக சிவலிங்கா, மகளிர் மட்டும் படங்களில் நடித்தார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவந்த நிலையில் தற்போது பானுப்பிரியா டப்பிங் கலைஞராக மாறி உள்ளார்.
இந்தநிலையில் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும், தமிழில் நடிகையர் திலகம் உருவாகி வருகின்றது. மே மாதம் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டப்பிங், இசை சேர்ப்பு மற்றும் தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. இதில் பானுப்பிரியா டப்பிங் பேசி வருகிறார். இந்தப் படத்தில் சாவித்ரியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேசுக்குத்தான் பானுப்பிரியா குரல் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது