Home இலங்கைஉடையார்கட்டு குளத்தில் இருந்து இராணுவப் பண்ணைகளுக்கு நீர் இறைப்பு – கவனயீர்ப்பு போராட்டம்…

உடையார்கட்டு குளத்தில் இருந்து இராணுவப் பண்ணைகளுக்கு நீர் இறைப்பு – கவனயீர்ப்பு போராட்டம்…

by admin


இராணுவத்தினரால் இயக்கப்படும் பண்ணைகளுக்கு, உடையார்கட்டு குளத்தில் இருந்து, பாரிய நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் இராணுவத்தினர் நீர் இறைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று உடையார்கட்டு பொது நேக்கு மண்டபத்தில் ஒன்று கூடிய மக்கள் பதாகைகளுடன் பரந்தன்-முல்லைத்தீவு வீதிவரை சென்று வீதியோராமாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து, உடையார் கட்டுக் குளத்தில் நீர் இறைக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள இடத்திற்கும் சென்ற மக்கள், தமது எதிர்ப்பு போராட்டத்தினை நடாத்தி உள்ளனர். இராணுவத்தின் செயற்பாட்டால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்ட விவசாயிகள், நளையதினம் பிரதேச செயலாளர் மற்றும், அரசாங்க அதிபருக்கு மகஜரும் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தனர். இன்றைய போராட்டத்தில் பெருமளவிலான விவசாயிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More