Home இந்தியாகாவிரி மேலாண்மை வாரியம் – 4-வது நாளாக தி.மு.க.வினர் போராட்டம்…

காவிரி மேலாண்மை வாரியம் – 4-வது நாளாக தி.மு.க.வினர் போராட்டம்…

by admin

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இன்று 4-வது நாளாக தி.மு.க.வினர் சாலை மற்றும் புகையிரதத்தினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கொரட்டூர் மற்றும் திருவொற்றியூரில் திமுகவினர் புகையிரத மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவொற்றியூரில் புகையிரத மறியலில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த போராட்டம் காரணமாக புறநகர் புகையிரதங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆலந்தூரில் மா.சுப்பிரமணியன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மற்றும் அதன் தோழமை கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மற்றும் தி.மு.க.வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More