Home இலங்கைதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானம்?

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானம்?

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டமொன்றின் கீழ் புதிய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய எதிர்வரும் 18 மாத காலப் பகுதிக்கான ஆட்சியை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கியுள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தை எவ்வாறு பிரதிநிதித்துவம் செய்வது என்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ஐந்து பேர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார். அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையில் இந்தக்குழுவினர் செயற்பட உள்ளனர்.

தற்போதைய நிலைமைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எதிர்கால திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன. எதிர்வரும் பதினெட்டு மாத காலப் பகுதியில் அரசாங்கத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்த திட்டப் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More