Home இந்தியாஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியீட்டி முதலிடத்துக்கு முன்னேற்றம்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியீட்டி முதலிடத்துக்கு முன்னேற்றம்

by admin


ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் அணியை 64 ஓட்ட வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியீட்டியுள்ளது. ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டம் புனேவில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 204 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 205 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 140 ஓட்டங்கள் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்மூலம் சூப்பர் கிங்ஸ் அணி 64 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. சென்னை அணியின் வட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றியின்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More