Home இலங்கைசுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தை பகிஸ்கரிக்கப் போவதாக அறிவிப்பு

சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தை பகிஸ்கரிக்கப் போவதாக அறிவிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை பகிஸ்கரிக்கப் போவதாக, அண்மையில் அரசாங்கத்தை விட்டுவிலகிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். கட்சியின் சில முக்கிய பதவிகளை வகித்து வருவோரின் பதவி நிலைகள் மாற்றப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்சி இந்த மாற்றத்தை செய்யத் தவறினால் நிச்சயமாக சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை பகிஸ்கரிக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர். மேலும், தனியான மே தினக் கூட்டமொன்றை நடாத்துவதற்கு நேரிடும் என தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் கட்சியில் தொடர்ந்தும் நீடித்தால் கட்சிக்கு எதிர்காலமில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More