Home உலகம்இந்தோனேசியாவில் பெட்ரோல் கிணறு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் பெட்ரோல் கிணறு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

by admin


இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட பெட்ரோல் கிணறு ஒன்று தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பசி புட்டி என்னும் சுமார் 250 மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்பட்ட இந்த கிணற்றில் இருந்து ஊற்றெடுத்து வழியும் கச்சா எண்ணையை பிடித்து செல்வதற்காக சில நாட்களாக ஆண்களும், பெண்களும் அங்கு முகாமிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சுமார் 50 பேர் தீயில் சிக்கிக் கொண்டதாகவும் அவர்களில் 15பேர் உயிரிழந்துள்ள நிலையில் காயமடைந்த சுமார் 40 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் அருகாமையில் உள்ள 5 வீடுகள் அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More