Home சினிமாமணிரத்னம் படத்தில் அசத்தும் விஜய் சேதுபதி…

மணிரத்னம் படத்தில் அசத்தும் விஜய் சேதுபதி…

by admin


மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை வென்று வரும் விஜய்சேதுபதி மணி ரத்தினத்தில் இயக்கத்தில் நடிக்கும் இந்தப் படம் குறித்தும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். `காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்கச் சிவந்த வானம்’ படத்தை இயக்கி வருகிறார்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும், சிம்பு இன்ஜினீயராகவும், விஜய்சேதுபதி பொலிஸாகவும் நடிக்கிறார்கள். இதில் சிம்பு, அரவிந்த்சாமி சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி `செக்கச் சிவந்த வானம்’ படப்பிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள், மே இரண்டாவது வாரம் வரை படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிப்பதாகவும், ஜோதிகா ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More