Home இலங்கையாழ்.சுன்னாகம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் – நகைகள் கொள்ளை

யாழ்.சுன்னாகம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் – நகைகள் கொள்ளை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.சுன்னாகம் பகுதியில் காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்துள்ளது. சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள கால் நடை மருத்துவமனையில் காவலாளியாக கடமையாற்றும் காவலாளியிடம் இருந்தே நகை பணம் என்பவ கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெயரியவருவதாவது ,

நான்கு பேர் கொண்ட கொள்ளைக்குழு இன்று புதன்கிழமை அதிகாலை கால் நடை மருத்துவ மனைக்குள் அத்துமீறி உள்நுழைந்து அங்கு கடமையில் ஈடுபட்டு இருந்த காவலாளியின் சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் என்வற்றை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து தப்பி சென்று உள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாக காவல்நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றார்கள்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More