Home இலங்கைமுறுகண்டியில் கோரவிபத்து பதின்நான்கு பேர் வைத்தியசாலையில்

முறுகண்டியில் கோரவிபத்து பதின்நான்கு பேர் வைத்தியசாலையில்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முறுகண்டியில்  இடம்பெற்ற கோரவிபத்து காரணமாக காயமடைந்த பதின்நான்கு பேர் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது

அக்கரைப்பற்றில் இருந்து  யாழ் நோக்கிச் சென்று  கொண்டிருந்த  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்தை மல்லாவியில் இருந்து கீரிமலை சென்றுகொண்டிருந்த தனியார் மினிபஸ் ஒன்று இன்று காலை ஏழு மணியளவில்  கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் வைத்து முந்திச்செல்ல எத்தனித்த  வேளையே  இவ் விபத்து இடம்பெற்றுள்ளது
murukandi-1
குறித்த விபத்தில் தனியார் மினிபஸ்சில்  பயணித்துக் கொண்டிருந்த  பத்து  ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்கலாக பதின்நான்கு  பேர் படுகாயமடைந்த  நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதில் இருவர்  அவசர சிகிச்சைப்  பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை  மாங்குளம்  காவல்துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

murukandi-2murukandi-4 murukandi-5 murukandi-6 murukandi-7 murukandi-8

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More