தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்தாட்டக் குழுவினரையும் பயிற்சியாளரையும் மீட்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை வீரர ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மா சே நகரில் குகை ஒன்றினுள் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், பயிற்சியாளரும் உயிருடன் இருப்பது 9 நாட்களின் பின்னர் கண்டறியப்பட்ட போதிலும் அவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படையினர், முன்னாள் கடற்படை வீரர்கள், சர்வதேச நிபுணர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கடற்படை வீரர் குகையில் போதிய காற்று இல்லாததால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.