Home இந்தியாமாநிலங்களின் முதல் அமைச்சர்கள், அமைச்சர்கள் சீனா செல்வதற்கு கட்டுப்பாடுகள் இல்லை..

மாநிலங்களின் முதல் அமைச்சர்கள், அமைச்சர்கள் சீனா செல்வதற்கு கட்டுப்பாடுகள் இல்லை..

by admin


மாநிலங்களின் முதல் அமைச்சர்களோ, அமைச்சர்களோ சீனா செல்வதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.  திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல் அமைச்சருமான மம்தா பானர்ஜி, கடந்த ஜூன் மாதம் சீனா செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த பயணத்தை ரத்து செய்த அவர், தன்னை சீனா செல்ல விடாமல் மத்திய அரசு தடுத்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.

மம்தாவின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அரசு, மாநிலங்களின் முதல் அமைச்சர்களோ, அமைச்சர்களோ சீனா செல்வதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என தெளிவுபடுத்தி உள்ளது. அத்துடன், பல மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் பல தடவைகள் சீனாவுக்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளது.

அதன்படி சந்திரசேகர் ராவ் (தெலுங்கானா), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) ஆகியோர் அவ்வப்போது சீனா சென்று வருவதாக கூறியுள்ள மத்திய அரசு, மராட்டிய முதல் அமைச்சர் பட்னாவிஸ் (2015), அரியானா முதல் அமைச்சர் மனோகர் லால் கட்டார் (2016), சத்தீஷ்காரின் ராமன் சிங் (2016) போன்ற முதல் அமைச்சர்கள் அண்மைய ஆண்டுகளில் சீனா சென்று வந்ததாக கூறியுள்ளது.

இதைப்போல தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணராவ், எரிசக்தி துறை மந்திரி ஜெகதிஷ் ரெட்டி போன்ற மாநில மந்திரிகளும் அரசு முறை பயணமாக சீனா சென்று வந்திருப்பதாகவும் அரசு தகவல்கள் தெரிவித்தன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More