யாழ் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்து ஆவாக்குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை நண்பகல் வேளை 3 மோட்டார் சைக்கிள்களில் இலக்கத் தகடுகளையும் முகங்களையும் மறைத்துக் கொண்டு வந்த வந்த 9 பேர் கொண்ட குழு ஒன்றே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆவா குழுவிலிருந்து பிரிந்து சென்ற ஒருவரது நண்பரின் வீடு ஒன்றிலேயே மேற்படி தாக்குதல் இடம்nபெற்றுள்ளது. முன்னரும் குறித்த வீடு தாக்குதலுக்குள்ளாகயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் காரணமாக ஒருவர் காயமடைந்தநிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது