Home இலங்கைஏழாலையில் சகோதர்கள் மீது வலி.தெற்கு பிரதேச சபை எதிர்க்கட்சி உறுப்பினர் தலைமையிலான குழுவினர் தாக்குதல்

ஏழாலையில் சகோதர்கள் மீது வலி.தெற்கு பிரதேச சபை எதிர்க்கட்சி உறுப்பினர் தலைமையிலான குழுவினர் தாக்குதல்

by admin


யாழ்.ஏழாலை பகுதியில் சகோதர்கள் இருவர் மீது வலி.தெற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏழாலை மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏழாலை வடக்கை சேர்ந்த செல்வராசா அரவிந்தன் (வயது 25) மற்றும் அவரது சகோதரனான செல்வராசா சஜீவன் (வயது 18) என்பவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் காயமடைந்துள்ள இரு சகோதார்களும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இது குறித்து தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வைத்திய சாலை காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்கையில். , வீட்டில் இருந்த தம்மை பிரதேச உறுப்பினர் தொலைபேசி ஊடாக அழைத்திருந்தார். அதன் பிரகாரம் நாம் அங்கு சென்றபோது அவரும் அவருடன் நின்ற ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் எம்மை தாக்கினார்கள் என தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More