Home இலங்கைஇராணுவத்தினரால் ஏமாற்றப்பட்ட பரவிப் பாஞ்சான் மக்கள் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி:

இராணுவத்தினரால் ஏமாற்றப்பட்ட பரவிப் பாஞ்சான் மக்கள் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி:

by admin

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள் இன்று 10-08- 2016 (புதன்கிழமை) மீண்டும் குறித்த பகுதிகளில் உள்ள இராணுவ  அதிகாரியினைச்  சந்திக்க சென்றிருந்தனர்  சென்றிருந்தனா்.

மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதற்கு தீர்வாக பிரதேசத்தின் ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கடந்த மாதம் உறுதியளித்திருந்தார்.
எனினும், ஏனைய காணிகளையும் விடுவித்து தமது சொந்த இடத்தில் குடியேறுவதற்கு வழிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியே பிரதேச மக்கள் இன்றைய தினம்  குறித்த  இராணுவ அதிகாரியினை  சந்திக்கச்சென்றிருந்தனர் ஆனால் குறித்த முகாமின் இராணுவ அதிகாரி பொது மக்களை சந்திப்பதை தவிா்த்துக்கொண்டாா்.
.
பல வருட காலமாக வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்கி பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கும் பரவிப்பாஞ்சான் மக்கள், இபபிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் அத்துடன்  மீண்டும்  ஒரு கிழமைக்குள்  தமக்கு தீர்வு எட்டாவிட்டால்  வருகின்ற சனிக்கிழமையில் இருந்து தமது காணிகளை விடுவிக்கும்வரை முகாம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக தெரிவிக்கின்றனர் .

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More