இந்தியா

இந்திய மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு வை பிரிவு பாதுகாப்பு:-

india

இந்திய மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு, ஆயுத மேந்திய மத்திய துணை ராணுவப் படையினருடன் கூடிய ‘வை’ பிரிவு பாதுகாப்பை வழங்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், ரவி சங்கர் பிரசாத்துக்கு வை பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய ரிசர்வ்  காவல் படையைச் சேர்ந்த 7 முதல் 8 வீரர்கள், மத்திய அமைச்சர் ரவி சங்கரின் பாதுகாப்புக்குப் பணியமர்த்தப் படுவார்கள் எனவும்  சிஆர்பிஎஃப்பின் சிறப்பு விஐபி பாதுகாப்பு கமோண்டோக்கள் இதற்கான பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஹாரில் இருந்து ராஜ்ய சபா எம்பியான ரவி சங்கர் பிரசாத், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers