30
இந்திய இராணுவ ரகசியம் தொடர்பில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் துணைத் தூதரக அலுவலக உறுப்பினர்கள் இருவரை டெல்லி பொலிஸார் ராஜஸ்தானில் கைது செய்துள்ளதாக தி இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணைத் தூதர் அப்துல் பாஸித்துக்கு வெளியுறவு அமைச்சகம் அழைப்பாணை அனுப்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட மவுலானா ரம்ஜான், சுபாஷ் ஜாங்கிர் ஆகிய இருவரும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரக அலுவலகத்துடன் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளதாக கைது நடவடிக்கை தொடர்பாக டெல்லி பொலிஸ் குற்றப்பிரிவு இணை ஆணையர் ரவீந்திர யாதவ் கூறியுள்ளார்.
அவர்கள் இருவருமே பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-ன் முகவர்களாக செயல்பட்டிருப்பதாகவும் இவர்களுடன் தொடர்பில் இருந்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி மெஹ்மூத் அக்தர் எனத் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவார காலமாக இருவரையும் கண்காணித்த பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட எனக் கூறிய அவர் அவர்கள் இருவரிடமும் சானக்யாபுரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவர்களிடமிருந்து இந்திய ராணுவம் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் டெல்லி பொலிஸ் குற்றப்பிரிவு இணை ஆணையர் ரவீந்திர யாதவ் மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love