அவன்ட் கார்ட் கப்பல் கப்டன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரை பார்வையிடச் சென்றவர்கள் குறித்த கதவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.
கப்டனைப் பார்வையிடச் சென்ற சட்டத்தரணிகள் உள்ளிட்ட ஏனையவர்கள் பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ள அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றில் கோரியுள்ளனர்.
காலி நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாறு கப்டனை பார்வையிடச் சென்றவர்கள் குறித்த விபரங்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என கப்டனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு குறித்த சட்ட மா அதிபரின் பரிந்துரைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.