பாராளுமன்றத்தில் பேசுவதற்கு உரிய நேரம் ஒதுக்கப்படாததைக் கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகியுள்ளார்.
இன்று காலை நாடாளுமன்றம் கூடிய போது ராஜ்யசபாவில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில மாயாவதி பேச ஆரம்பித்த போது சபாநாயகர் ஹமீத் அன்சாரி பின்னர் பேசலாம் என கூறி அனுமதி மறுத்தார்.
இதனையடுத்து ஹமீத் அன்சாரியின் இருக்கையை முற்றுகையிட்டு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாயாவதி நாடாளுமன்றில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, ராஜ்யசபாவில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விலக செய்ய முடிவு செய்துள்ளேன் என அறிவித்ததுடன் இன்று மாலை துணை ஜனாதிபதியை சந்தித்து தனது பதவிலிவலகல் கடிதத்தினை கையளித்துள்ளார்.