Home உலகம்நேபாளத்தில் வெள்ளம் – நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளது

நேபாளத்தில் வெள்ளம் – நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளது

by admin

 

நேபாளத்தில் ஏற்ட்டுள்ள தொடர் மழை   ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக   27 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி காபணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கரை கடந்து வெளியேறிய வெள்ளநீர் அரித்துச் சென்றதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதனால், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த  பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சுமார் 60 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More