152
தரமற்ற 490 குடிநீர் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி சவுபே தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மக்களவையில் தரமற்ற குடிநீர் நிறுவனங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 1,123 குடிநீர் நிறுவனங்களின் குடிநீர் போத்தல்கள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அதில், 490 நிறுவனங்களின் குடிநீர் தரமற்றவை என கண்டறியப்பட்டது. அந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Spread the love