சினிமா பிரதான செய்திகள்

ஜோக்கர் துளசியும் கொரோனாவுக்கு பலி

பிரபல நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்று காரணமாக உயிாிழந்துள்ளாா். நாடக நடிகரான இவர் 1976ஆம் ஆண்டு வெளியான ‘உங்களில் ஒருத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

45 ஆண்டுகளாக பல்வேறு திரைப்படங்கள், தொலைகாட்சி தொடர்கள் ஆகியவற்றில் நடித்துள்ள துளசி. ‘கோலங்கள்’, ‘வாணி ராணி’, ‘கஸ்தூரி’, ‘அழகு’ ஆகிய தொடா்களில் நடித்த கதாபாத்திரங்கள் பிரபலமானவை.

இறுதியாக ‘தந்துவிட்டேன் என்னை’ என்ற இணையத் தொடாில் நாயுடு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவா் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று (மே 09) அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.