Home இலங்கை DTNAயின் அதி  உயர் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் முக்கிய தீரமானங்கள் நிறைவேற்றம்.

DTNAயின் அதி  உயர் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் முக்கிய தீரமானங்கள் நிறைவேற்றம்.

by admin
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதி  உயர் நிறைவேற்றுக் குழு கூட்டம் -பல்வேறு விடையங்களுக்கு தீர்மானம் நிறைவேற்றம்-ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அதி  உயர் நிறைவேற்றுக் குழு கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (5) காலை 10.30 மணியளவில் மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.

ரெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் ரெலோ கட்சி சார்பாக கட்சியின் செயலாளரும்,கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா),கட்சியின் ஊடக பேச்சாளர் குருசாமி சுரேன்,ஈபி.ஆர்.எல்.எப் கட்சி சார்பாக கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கட்சியின் உப தலைவர் இரா. துரைரட்னம், புளொட் கட்சி சார்பாக கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன்,கட்சியின் செயலாளர் ஆர்.ராகவன்,தமிழ் தேசிய கட்சியின் சார்பாக கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா,மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக கட்சியின் தலைவர் சிவநாதன் வேந்தன்,கட்சியின் பேச்சாளர் கணேசலிங்கம் துளசி,கட்சியின் கிழக்கு மாகாண பொறுப்பாளர் நாகலிங்கம் நகுலேஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த கூட்டத்தில் கட்சி சார்ந்த விடயங்கள், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதோடு, பல்வேறு விடயங்களுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்சியை பலப்படுத்துவது, சமகால பிரச்சினை, ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு, மயிலத்தமடு பிரச்சினை, மன்னாரில் காணிகள் அபகரிப்பு செய்யப் படுகின்றமை, மீன் இறக்குமதி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More