Home இலங்கைமுல்லைத்தீவு நித்தகைகுளம் உடைந்ததில் காணாமல் போயிருந்தவர்களில் ஆறு பேர் மீட்பு

முல்லைத்தீவு நித்தகைகுளம் உடைந்ததில் காணாமல் போயிருந்தவர்களில் ஆறு பேர் மீட்பு

by admin


முல்லைத்தீவில் நித்தகைகுளம் குளம் உடைந்ததில் காணாமல் போயிருந்தவர்களில் ஆறு பேரினை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். முல்லைத்தீவு, குமுலமுனை கிழக்கு பகுதியில் நித்தகைகுளம் உடைந்ததினால் குளத்திற்கு அருகில் இருந்தவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.குளத்திற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த தாய், தந்தை, குழந்தை மற்றும் குளத்திற்கு அருகில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த சிலருமே இவ்வாறு காணாமல் போயிருந்தனர். இந்தநிலையில் காணாமல் போயிருந்தவர்களில் ஆறு பேரினை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள நித்தகைகுளம் உடைப்பெடுத்தமையால் அப்பகுதி அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டு இக்குளத்தின் கட்டுமான பணி நடைபெற்றிருந்த வேளை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. அப்போதிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை குளம் நீர் இன்றி காணப்பட்டதுடன் அதன் கீழான வேளாண்மையும் பாதிப்படைந்திருந்தது. இந்தநிலையில் குளத்தின் அணைக்கட்டு பாரிய உடைப்பு ஏற்பட்டுள்ளது.

குளம் உடைந்ததில் அப்பகுதியில் உள்ள அனைத்து விவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளதாகவும் மேலும் மழை வீழ்ச்சி அதிகரித்தால் அந்ந ஊரே நீரில் மூழ்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நிலவும் சீரற்ற காலநிலையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More