Home இலங்கைஜனாதிபதியின் கருத்து இன நல்லிணக்கத்துக்கு எதிரானது

ஜனாதிபதியின் கருத்து இன நல்லிணக்கத்துக்கு எதிரானது

by admin

யுத்தக் குற்றமிழைத்த படையினரை முதலில் இனங்கண்டு, சட்டத்தின் முன் நிறுத்திய பின்னர் அவர்களை விடுதலை செய்வதா, இல்லையா என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சந்திவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய படையினரைக் காட்டிக்கொடுக்க முடியாது எனவும் யுத்தத்தின் போது இரு தரப்பிலும் தவறுகள் நிகழ்ந்துள்ளது. இனால் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டுமாயின், யுத்தக்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான படைத்தரப்பினரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்து இன நல்லிணக்கத்துக்கு எதிரானது என்றே கருத வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துவைத்த பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுத்த காலத்தில் படையினர் தவறிழைத்திருந்தாலும், அவர்களை விட தவறிழைத்த விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் சுதந்திரமாக இருக்கின்றனர்.

இத்தகைய நிலைமையில் படையினரை மாத்திரம் தண்டிக்க முடியாது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டுமாயின் குற்றம் சுமத்தப்பட்டுள்ள படையினரையும் விடுவிக்க வேண்டும் எனத் தொவித்திருந்தர். இது தொடர்பிலேயே அருட்தந்தை சந்திவேல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More