Home இலங்கைவறுமையை விற்பனை செய்யும் அரசிலுக்குப் பதிலாக வறுமையை ஒழிக்கும் அரசியல் வேண்டும்…

வறுமையை விற்பனை செய்யும் அரசிலுக்குப் பதிலாக வறுமையை ஒழிக்கும் அரசியல் வேண்டும்…

by admin


வாக்குறுதி அரசியல் இன்றி நாட்டை உண்மையிலேயே கட்டியெழுப்பக்கூடிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிலாபத்தில் நேற்று (31.10.19) பிற்பகல் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தேர்தல் மேடைகளை நோக்கி பார்க்கும் போது  நத்தார் காலத்தை போன்று தெரிகிறது. இரண்டு வேட்பாளர்கள் இருக்கின்றனர். மேடைகளுக்கு ஏறுகின்றனர். செல்லும் செல்லும் இடத்தில் காண்பதை எல்லாம் இலவசமாக தருவதாக கூறுகின்றனர்.

அப்படியென்றால் இவ்வளவு காலம் யார் ஆட்சி செய்தது? கடந்த 70 வருடங்களாக தேர்தல் வந்தவுடன் இவர்கள் வந்து வறுமையை விற்பனை செய்கின்றனர். வறுமையை விற்பனை செய்யும் அரசிலுக்கு பதிலாக வறுமையை ஒழிக்கும் அரசியல் ஒன்றை இந்நாட்டில் ஏற்படுத்தவே நாம் வந்துள்ளோம்.

“எமக்கு அதிகாரத்தை தாருங்கள். எங்களிடம் உள்ள குறைப்பாடு என்ன? எம்மிடம் இருப்பது ஒரேயொரு குறைதான். அவர்கள் பெரிய குடும்பங்களை சேர்ந்தவர்கள். நாங்கள் சிறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More