Home இலங்கை24 மணிநேரத்தில் கொரோனோவால் யாழ்.வாசிகள் இருவர் மரணம்

24 மணிநேரத்தில் கொரோனோவால் யாழ்.வாசிகள் இருவர் மரணம்

by admin

கொரோனா தொற்று காரணமாக யாழில் மேலும் ஒருவர் இன்றைய தினம் காலை உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியை சேர்ந்த 59 வயதானவரே உயிரிழந்துள்ளார். 


யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். 

இதேவேளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த 77 வயதானவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


உயிரிழந்த இருவரது சடலங்களும் சுகாதார விதிமுறைகளின் கீழ் மின் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More