Home இலங்கைமன்னாரில் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் சாதனை

மன்னாரில் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் சாதனை

by admin

வெளியாகியுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளில் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமாக காணப்படும் மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த  இரண்டு மாணவிகள் கலைப்பிரிவில் மன்னார் மாவட்ட மட்டத்தில் 1 ஆம் மற்றும் 4ஆம் இடத்தை பெற்று  மடுக்கரை கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 


மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவிகளான  ஜெயரத்தினம் ஜெயப்பிரதா  கலைப்பிரிவில் 3 A சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் 1 ஆம் இடத்தினையும்,  இராமநாதன் புஸ்பலீனா கலைப்பிரிவில் 2 A, B பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 4 ஆம் இடத்தையும் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளனர்.


குறித்த மாணவிகள்  பல்வேறு அசௌகரியங்களுக்கும்,  சவால்களுக்கும்  முகம் கொடுத்து மிகவும் தூர பிரதேசமாக இருக்கும் தங்களுடைய கிராமத்திலிருந்து நானாட்டான் பிரதேசத்தில் உள்ள  டிலாசால் கல்லூரிக்கு சென்று கல்வி கற்றனர்.
குடும்பத்திலுள்ள வறுமையான நிலையிலும் மாவட்ட மட்டத்தில்  சிறந்த இடத்தை பெற்று  தங்களுடைய கிராமத்திற்கும் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை தேடி கொடுத்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More