Home இலங்கைமன்னார் முழுமையாக முடங்கியது – காவல்துறை ,இராணுவம் விசேட பாதுகாப்புக் கடமையில்.

மன்னார் முழுமையாக முடங்கியது – காவல்துறை ,இராணுவம் விசேட பாதுகாப்புக் கடமையில்.

by admin

நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை முழுமையாக முடங்கியுள்ளது.


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா டிவைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நாடாளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் எதிர் வரும் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 4 மணி  வரையுமான 3 நாட்கள் நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் முழுமையாக வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் மன்னார் நகரில் காவல்துறையினா் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு  அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் மாத்திரம் நடமாட அனுமதி வழங்கியுள்ளனர்.


மேலும் வீதிகளில் நடமாடுபவர்களை இராணுவம் மற்றும் பொகாவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு தேவை இன்றி நடமாடுபவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன்,அரச தனியார் போக்கு வரத்துக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More