Home இலங்கைகடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரைக் காணவில்லை

கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரைக் காணவில்லை

by admin

திருகோணமலை, திருக்கடலூர் பகுதியிலிருந்து நேற்றையதினம்   படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவர் கரை திரும்பவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவன் (வயது 21), ஜீவரெட்ணம் சரன்ராஜ் (வயது 34) மற்றும் சிவசுப்ரமணியம் நதுசன் (வயது 21) ஆகிய மூவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக 10க்கும் மேற்பட்ட படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More