Home இலங்கைவட்டுக்கோட்டையில் கடைகளின் கூரை பிரித்து திருட்டு – ஒருவர் கைது

வட்டுக்கோட்டையில் கடைகளின் கூரை பிரித்து திருட்டு – ஒருவர் கைது

by admin

வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வட்டுக்கோட்டை சங்கரத்தை வீதியில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டு இடம்பெற்றிருந்தது.

இந்த திருட்டுச் சம்பவங்க்களுடன் தொடர்புடைய சுழிபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பால்மா வகைகள், அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் கூறினர்.

திருட்டுச் சம்பவங்களை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ள சந்தேக நபர், தான் தனியவே திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, பயணத்தடை நடைமுறையில் இருந்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்னர் மாவடி மூளாய் வீதியிலும் கடை ஒன்று கூரை பிரித்து இறங்கி பணம் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More