Home இலங்கைதங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமார சுவாமி

தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமார சுவாமி

by admin

தங்கமயில்வாகனம்

திருக்கார்த்திகை திருவிழாவான இன்றைய தினம் மாலை நல்லூர்  முத்துக்குமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்காட்சி அளித்தார்.  வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 17ஆம் திருவிழாவான இன்றைய தினம் திருக்கார்த்திகை திருவிழாவாகும். 


அதனை முன்னிட்டு இன்றைய தினம் மாலை அழகிய  அலங்காரத்தில் முத்துக்குமார சுவாமி தங்க மயில் வாகனத்தில்  எழுந்தருளினார். கொரோனோ தொற்று காரணமாக ஆலயத்தினுள் பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படாத நிலையில் ,திருவிழாக்கள் அனைத்தும் உள்வீதியிலையே நடைபெற்று வருகின்றது. 


அதேவேளை  ஆலய நிர்வாகம் ஆலய திருவிழாக்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக நேரடியாக ஒலிபரப்பு செய்து வருகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More