தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.தொடர்ச்சியாக காற்றுடன் மழை பெய்து வருகின்ற மையினால் மக்கள் இடம் பெயர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்
காற்றின் வேகம் தொடர்ச்சியாக உயர்வாக காணப்படுவதனால் கடற்கரை ஓரங்களில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு,தேவன்பிட்டி,அந்தோனியார் புரம் ஆகிய கிராமங்கள் கடல் நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது. கிராம அலுவலர்கள் ஊடாக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.மேலும் மாவட்டத்தில் உள்ள குளங்களின் நீர் மட்ட உயர்வு அதிகரித்து காணப்படுகிறது.
கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் முப்படையினர் ஈடு பட்டுள்ளதோடு,அனர்த்த முகாமைத்துவ நிலையம்,மாவட்ட செயலகத்துடன் இணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.




