வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் இல் இன் சகோதரர் எனக் கூறப்படும் கிம் ஜொங் நாமின் சடலத்தை வடகொரியாவிற்கு அனுப்பி வைக்க மலேசியா இணங்கியுள்ளது. அண்மையில் மலேசிய விமான நிலையத்தில் வைத்து மர்மமான முறையில் கிம் ஜொங் நாம் கொல்லப்பட்டிருந்தார். பெண்கள் இருவர் விச இரசாயன தாக்குதல் நடத்தி நாமை கொலை செய்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் பின்னர் சடலத்தை ஒப்படைக்க இணங்கப்பட்டுள்ளது. சடலத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் வடகொரியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.