141
மன்னார் – மடு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாலம்பிட்டி பிரதான வீதியோரம் சுமார் 10 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று இன்று (06) காலை முதல் நகர முடியாமல் விழுந்து கிடக்கிறது. அந்த யானை எழுந்து நடக்க முடியாமல் மிகவும் பலவீனமான நிலையில் உயிருக்கு போராடி வருகிறது.
நேற்று வியாழக்கிழமை (5) இரவு இந்தப் பகுதிக்கு ஒரு யானைக் கூட்டம் வந்ததாகவும், அதிலிருந்து பிரிந்த ஒரு யானையே இவ்வாறு வீழ்ந்து கிடப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பொதுமக்கள் இது குறித்து உடனடியாக காவல்துறையினா் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள (Wildlife Department) அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மடு மற்றும் பாலம்பிட்டி ஊடாகப் பயணிக்கும் மக்கள் இந்த யானையைப் பார்வையிட்டு வரும் அதேவேளை, வனவிலங்கு வைத்திய அதிகாரிகள் விரைவாக வந்து யானைக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கினால் மட்டுமே அதன் உயிரைக் காப்பாற்ற முடியும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Spread the love

