ஹோர்முஸ் நீரிணை , கப்பல்கள் , ஈரான் ,அனுமதி , நிபந்தனைகள்
உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக, ஆக்கிரமிப்பாளர் நாடுகளுக்குச் சொந்தமில்லாததும் அவர்களுடன் தொடர்பில்லாததும் ஆகிய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில், தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் ஈரான் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பின்னரே கப்பல்கள் அந்த நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், பரந்தளவிலான மோதல்கள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், “போர் – பேச்சுவார்த்தை – போர் நிறுத்தம்” என்ற சுழற்சியை ஈரான் இனி பொறுத்துக்கொள்ளாது எனத் தெளிவுபடுத்தினார். கடந்த ஜூன் மாதம் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே 12 நாட்கள் நீடித்த மோதலின் போது, ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.“அவர்கள் நிறுத்தச் சொன்னதால் நாங்களும் நிறுத்தினோம். ஆனால் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் இந்தப் போரைத் தொடங்கியுள்ளனர்,” எனவும் அந்த பேச்சாளர் தெரிவித்தார்.
#StraitOfHormuz #IranForeignMinistry #OilTradeRoute #GlobalSecurity #MiddleEastConflict

