மில்வாக்கி இஸ்லாமிய சங்கத் தலைவர் கைது

by admin

மில்வாக்கி இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் சலா சர்சூர், கடந்த மார்ச் 30 ஆம் திகதி அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வரும் அவர், தனது ஆரம்பக்கால குடியேற்ற ஆவணங்களில் உண்மைகளை மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு  தற்போது இந்தியானாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.    அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இவரது கைது பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என அவரது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. மில்வாக்கி மேயர் காவலியர் ஜான்சன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இந்த நடவடிக்கையை “அதிகார துஷ்பிரயோகம்” எனக் கண்டித்துள்ளனர்.மேலும் விவரங்களை வெளியிட அதிகாரிகள் விரைவில் செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#MilwaukeeIslamicSociety #SalahSarsour #ICEArrest

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More