221
இலங்கை ஜனாதிபதி கௌரவ @anuradisanayake அவர்களின் வாழ்த்துகளால் பெருமிதமடைகிறேன். உங்களின் அன்பான நற்செயலுக்கு மனமார்ந்த நன்றிகள். என தன்னை வாழத்திய இலங்கையின் ஜனாதிபதிக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக – தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள கௌரவ சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்.
இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறைகளைக் கடந்த மக்கள் தொடர்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இலங்கையும் இந்தியாவும் மென்மேலும் நெருக்கமான உறவுகளையும் வலுவான பங்களிப்பையும் கட்டியெழுப்பி வரும் நிலையில், நமது எதிர்காலம் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்திற்கும் வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும்.
இந்தியா – இலங்கை இடையிலான வலுவான உறவின் ஊடாக, மேலதிக சுபிட்சம் மற்றும் வளர்ச்சியை நோக்கி இணைந்து பணியாற்றுவதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
உங்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க இலங்கை மக்கள் சார்பாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என இலங்கை ஜனாதிபதி வாழத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

