மல்யுத்தம் போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 4 பதக்கங்களை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினர் 16 வயது கீழ் பிரிவு ஆண்கள் ம.ருபிஷன் மற்றும் லி.வசீகரன் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும் பா.அசோக்குமார் வெள்ளிப் பதக்கத்தையும் மற்றும் 18 வயது கீழ் பிரிவு பெண்களுக்கான போட்டியில் அ.அஜந்தினி தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 3 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொடுத்து, மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
போதிய விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பிரத்தியேக மல்யுத்த மெத்தைகள் (Wrestling Mats) இல்லாத சூழலிலும், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டலில் மாணவர்கள் வியக்கத்தக்க திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இப்போட்டிகளில் தங்க மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற மாணவர்கள், தேசிய மட்டப் போட்டிகளில் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தகுதி பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட பாராட்டு நிகழ்வுகள் அந்தந்தப் பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டன. கஷ்டப் பிரதேசங்களில் இருந்து வந்து சாதித்த இந்த மாணவர்களின் எதிர்கால விளையாட்டுத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குத் தேவையான பிரத்தியேக விளையாட்டுப் உடைகள் மற்றும் சத்துணவுகளை வழங்கப் பழைய மாணவர் சங்கங்கள் முன்வந்துள்ளன
#PalalyStudents #WrestlingChampions #JaffnaSports #SchoolWrestlingSL #ValiNorthTalents

