யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற சாலை விபத்தில் 80 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சில்லாலை பகுதியைச் சேர்ந்த முதியவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை காவல்துறையினா்் முன்னெடுத்து வருகின்றனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

