Home இலங்கை கிளிநொச்சியில் பிரதேச செயலங்களுக்கு நீர்த்தாங்கி உழவு இயந்திரங்கள் கையளிப்பு

கிளிநொச்சியில் பிரதேச செயலங்களுக்கு நீர்த்தாங்கி உழவு இயந்திரங்கள் கையளிப்பு

by admin

வரட்சிக்கால அனர்த்தங்களை எதிர்கொள்ளும் பொருட்டு  ஜனாதிபதி செயலகத்தினால் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட நீர்தாங்கி உழவு இயந்திரங்கள் நான்கு  பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த  நான்கு உழவு இயந்திரங்களும்  கரைச்சி கண்டாவளை  பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேச செயலகங்களுக்கு  கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வைத்து மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நான்கு பிரதேச செயலாளர்களிடம் கையளித்துள்ளார். இதன் போது மேலதிக அரச அதிபர் சி. சத்தியசீலன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோர் உடனிருந்தனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More