Home இலங்கைபதில் நீதியரசர் – பதில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்

பதில் நீதியரசர் – பதில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்

by admin

பதில் நீதியரசர் மற்றும் பதில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஆகியோர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துள்ளனர்.  உயர் நீதிமன்ற நீதிபதி கே. சிசிர த அப்று பதில் கடமையாற்றும் நீதியரசராக சத்திய பிரமாணம் செய்த அதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.எச்.எம். நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக சத்திய பிரமாணம் செய்துள்ளார்.

இதேவேளை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குருணாகல் மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நால்வரும், மாவட்ட அமைப்பாளர்கள் மூவரும்  இன்று ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More