Home இலங்கைஇலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது – அமெரிக்க காங்கிரஸ்

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது – அமெரிக்க காங்கிரஸ்

by admin


இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா காங்கிரஸ் சபை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸ் சபையின் பிரதிநிதி பில் ஜோன்சன் ( Bill Johnson ) இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். தேசிய அரசாங்கத்தின் பொருளாதார முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியது என  அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதிகள் தற்போது இலங்கைக்கு  வந்துள்ள நிலையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகள் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வடக்கு மக்களின் அபிலாஸைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும்  பில் ஜோன்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More