குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போதைப் பொருளை இல்லாதொழிப்பதற்கு தெற்காசிய சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாடு பிராந்திய வலய இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கி வரும் மிகப் பெரிய சவால் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் போதைப் பொருள் விநியோகத்தை தடுத்து நிறுத்த தீவிர கண்காணிப்பு பொறிமுறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென அவா வலியுறுத்தியுள்ளார்.
போதைப் பொருள் பயன்பாடு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் தொடர்பில் நாடுகளுக்கு இடையில் புலனாய்வுத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.