Home இலங்கைஜனாதிபதியும் பிரதமரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

ஜனாதிபதியும் பிரதமரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் களுவாரச்சி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக போலியான ஆவணமொன்று ஊடகங்களின் முன்னிலையில் காண்பித்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணைகளின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகள் நேற்று நடைபெற்ற போது வேலைப் பளு காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை என ஜனாதிபதியும் பிரதமரும் அறிவித்திருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More