Home இலங்கைஐ நா பொருளாதார, சமூகப் பேரவை கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு…

ஐ நா பொருளாதார, சமூகப் பேரவை கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு…

by admin

ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுச் சபை கூட்டத்தொடர் நாளை (19) நியூயோர்க் நகரில் ஆரம்பமாகின்றது. பொதுச் சபை கூட்டத்தொடருடன் இணைந்ததாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக பேரவையின் கூட்டத்தொடர் இன்று (18) பிற்பகல் நியூயோர்க்கில் உள்ள ஐ நா தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. அரச தலைவர்கள் மட்டும் பங்குபற்றும் இக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேன  ; கலந்துகொண்டார்.

உலக நாடுகளின் கூட்டமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால பயணம் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திறனை மேலும் அதிகரித்தல், ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் நிர்வாக செலவுகளை குறைத்து உறுப்பு நாடுகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையில் செயற்படுவது தொடர்பாகவும் விரிவாக கவனம்செலுத்தப்பட்டது.  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல்வேறு நாடுகளின் அரச தலைவர்கள் இக்கூட்டத்தொடரில் பங்குபற்றினர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More