Home இலங்கையாழில் ஒருவர் கடத்தப்பட்டு கொலை

யாழில் ஒருவர் கடத்தப்பட்டு கொலை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணத்தில் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ். நாவலர் வீதி அரியாலையைச் சேர்ந்த  38 வயதான செல்வநாதன் பத்மபாலசிங்கம்  என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.  நேற்றிரவு இவரது வீட்டுக்கு அருகாமையில் வைத்து  இவர் கடத்தப்பட்டதாகவும் பின்னர் இவர் தாக்கப்பட்டு பண்டிக்கோட்டுப் பிள்ளையார் கோவில் வளாகத்தில்  போடப்பட்டுள்ளார் .

இந்தநிலையில் அவ்வழியால் சென்றவர்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற கபவல்துறையினர் அவை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த கொலை மற்றும் கடத்தல்   தொடர்பாக யாழ்ப்பாணம்  காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More